Tuesday, 23 December 2025

பாசப் பிரிவு

 

ஒன்றோடு ஒன்றாக பிறந்து வாழ்ந்து வளர்ந்த பிறகு மறந்து வாழ்வது பாசப் பிரிவு

ஓடோடி விளையாடி உரிமையோடு உறவாடி இப்போது பேசாத நட்பு பாசப் பிரிவு

ஒரு வீட்டுக் குழம்பைப் பல வீட்டில் சுவைத்து இப்போது வீட்டைப் பூட்டி உண்பது பாசப் பிரிவு

விசேஷ வீட்டுத் தட்டு முட்டுச் சாமானைத் தாராளமாய்த் தந்ததுபோய் வாடகைச் சாமான் வந்தது பாசப் பிரிவு

இறந்த வீட்டில் எல்லோரும் அழுதது போய் வாடகைக்கு அமர்த்தி அழ வைப்பது பாசப் பிரிவு

இவையெல்லாம் போனதே எனப் பெருமூச்சை விடும்போது சொட்டுக் கண்ணீர் வருகிறதே அதுவும் பாசப் பிரிவே!

- தஞ்சை த.இராமநாதன்

6 comments:

  1. பாசம் என்பது இப்போது வேஷம் ஆகிவிட்டது.இதில் பிரிவு எங்கே?

    ReplyDelete
  2. Love is always there , Only understand and feel it 😊

    ReplyDelete
  3. Every one running behind money.there is no time to think about love or relationship.i am telling the current

    ReplyDelete