வேண்டாததை வேண்டுமென்றே பேசி வேண்டாத வம்பை இழுப்பதும்
வேண்டியதை வேண்டுமென்றே பேசாமல் வேண்டாத வீம்பை வளர்ப்பதும் வேலை இல்லாதவர்களின் வீணான வேலை
வேண்டும்போது வேண்டியது கிடைக்காமல் போவதும்
வேண்டாதபோது வேண்டாதது கிடைத்து விடுவதும் வேண்டுதலைவிட வேண்டாமையே விவேகம் எனும் நிலை
கூட்டமாக கூடினால் பேசக் கூடாததை
கூட்டிப் பேசி கூடிய கூட்டத்தையே கூண்டோடு திசைத் திருப்புவதும்
கூடிய கூட்டத்தை கூட்டத்தோடு கூட்டமாக கோசம் போட வைத்து குருட்டுக் கூட்டமாக மாற்றுவதுதான் அரசியல் எனும் வலை!
- தஞ்சை த.இராமநாதன்

👍
ReplyDelete🙏
ReplyDelete