Sunday, 28 September 2025

பரம்பரைக் குணம்

 

புத்திகெட்டு திமிரோடு பேசுபவனிடம் பேசினால் பேசட்டுமெனப் பேசாமல்
விட்டு விட்டால் விடாமல் பேசுகின்றான்

திமிரால் கொழுத்து கத்துபவனிடம்
கத்தவிடாமல் கெத்தோடுப் பேசினால் குருடனைப் போல் பார்க்கின்றான்

வாயால் கெட்டு வாங்கிக்கொண்டவன்
அர்த்தமற்ற ராத்திரியில் குடையைப் பிடித்துத் திருடனைப் போல் திரிகின்றான்

பார்க்காத அளவு பணம் பார்ப்பவன்          பார்க்கும் பார்வையாலேயே பறந்தாலும்          பறக்க முடியாத குருவி ஆகின்றான்

பம்பரமாய்ச் சுற்றிப் பலவாறு ஆடம்பரம் செய்து சாயத்தைப் பூசி ஆடினாலும் பரம்பரைக் குணத்தோடு வாழ்கின்றான்!

- தஞ்சை த.இராமநாதன்

4 comments: