Wednesday, 20 August 2025

அருமையான ஆறு

 

ஐந்திணையில் நான்கினைக் கடந்து
ஆறோடு ஆறு ஆறாகவே இருந்து
ஆறாக ஓடோடிக் கடலோடுக் கலந்து     கரிக்கப் போவதை அறியாத ஆறே

ஆறு அறிவுகளைப் பற்றித் தெளிந்து
ஆற அமர்ந்து ஆறாவதை அறிந்து   பெரியோர் அறிவுரைக்குப் பணிந்து
தன்னிலை உணர்வது ஆறாம் அறிவே

ஆறக் கூடிய மனதை ஆற விடாதவாறு    சுட்டச் சொல்லின் காயம்  ஆறாதவாறு
அவதியின் அல்லலைக் காட்டாதவாறு வயோதிக வயதில் வாடுவோரைப் பாரு!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments:

  1. ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்
    ஆறறிவு இல்லா மனிதற்க்கு மிருகம் என்று பெயர்.
    மிக்க நன்றி

    ReplyDelete