Friday, 22 August 2025

திருச்சியில் அதிர்ச்சி

 

தேனாக பாய்ந்து அனைவருக்கும் இனித்த மொழி தமிழ்மொழி
தென்றலாக அனைவரையும் அரவணைத்த மொழி தமிழ்மொழி
வான் புகழ் கொண்ட வள்ளுவனால் புகழோடு வாழ்ந்த மொழி தமிழ்மொழி
மண் புகழ் பூங்கொன்றனால் உயர்ந்து வையகம் அறிந்த மொழி தமிழ்மொழி

விமான நிலையம் தமிழர் கோயிலைப் போல் கம்பீரமாகக் காட்சித் தருகிறது திருச்சியில்      கட்டணம் வசூலிக்க ஹிந்தியில் மட்டும் பேசுவதால் மனம் உறைகிறது அதிர்ச்சியில் 
வீண் பேச்சை மட்டும் பேசி நம் தமிழை நாமே தாழ்த்தி விட்டுவிடக் கூடாது வீழ்ச்சியில்
தமிழை வீழ்த்த எவர் முயற்சி செய்தாலும் அவர்களே வீழ்வர் அவரவர் சூழ்ச்சியில்!

- தஞ்சை  த.இராமநாதன்

4 comments:

  1. ஆரியர்களின் படையெடுப்பு நடந்து கொண்டே இருக்கிறது 2500 வருடங்களாக ...... இடையில் சில நூறு வருடங்கள் மட்டும் இல்லாமல் .....

    ReplyDelete