மனதில் பட்டதைப் பட்டெனச் சொல்லாது
மனனம் செய்து படபடவென சொல்வது
மாணவர்கள் செய்வது மட்டுமல்லாது மணமானவர்கள் செய்வதுவும் அதுவே
Magnetன் பொருள் காந்தமானாலும்
பொருள் ஈட்டுவோரை Magnet என்பதும்
Magnat என்பதை Magnet என்றாக்கி பணமே காந்தமாகிக் கவர்வது போதும்
நூல்களைப் படிக்க நூலகம் தேவை
நூலைத் தைக்கக் குத்தூசியும் தேவை
கருத்தைக் கோர்க்க நூல்கள் தேவை
நூலைத் தரிக்கப் பருத்தி வெடிப்பும் தேவை
முடிக்காக மண்டையில் துளையிட்டு
துளையிட்ட மண்டையில் பதியமிட்டு
பதியவைத்த முடியை வளர விட்டு முடியால் மூடிய மூளைக்கு முடி சூடல்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment