Saturday, 29 March 2025

நிலநடுக்கம்

 

ஆடாத நிலம் ஆடினால்
ஆடாத மனமும் ஆடுதே                            கல்லான கட்டிடம் சிதறினால்                கல்லான மனமும் சிதறுதே

உயர்வான இருப்பிடம் உடைந்தால்
உயிரின் இருப்பிடமும் உடையுதே        நிலையான நிலம் நடுங்கினால்      நிலையற்ற நிலையும் ஒடுங்குதே                        சுமைத் தாங்கும் பூமியே சாய்ந்தால்                    சுகமான வாழ்வும் சரிந்து சாயுதே

அங்கும் இங்கும் எங்கும் என்றும்
ஆடாத நிலமும் அதிர்ந்து ஆடலாம்
ஆணவ ஆட்டமும் அடியோடு முடியலாம்
முடியுமுன் முடிந்ததைச் செய்யலாமே!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments:

  1. ரவி சங்கர்1 April 2025 at 16:11

    இயற்கையை மீறிய வாழ்க்கை எதுவுமில்லை.

    ReplyDelete