Saturday, 22 March 2025

சோமன்தெரு கற்பிக்கிறது பாடம்

 

சோமன்தெருவின் ஒருபாதி இருப்பதோ ஆம்பலாப்பட்டின் வடபாதியில்
சோமன்தெருவின் மறுபாதி இருப்பதோ ஆம்பலாப்பட்டின் தென்பாதியில்
சோமன்தெருவாசிகள் பாதிப்பேர் வசிப்பது ஆம்பலாப்பட்டின் வடபாதியில் சோமன்தெருவாசிகள் மீதிப்பேர் வசிப்பது ஆம்பலாப்பட்டின்  தென்பாதியில் 

நான் குதித்தோடிக் குளித்தக் காசாங்குளம் இருப்பது ஆம்பலாப்பட்டின் வடபாதியில்  நான் குளித்தோடித் துவட்டிய காசாங்குலம் இருப்பது ஆம்பலாப்பட்டின் தென்பாதியில் எனது நன்செய் நெல் வயல்கள் இருப்பது ஆம்பலாப்பட்டின் வடபாதியில்                    எனது புன்செய் நல் கொல்லைகள் இருப்பது ஆம்பலாப்பட்டின் தென்பாதியில்

எல்லை கூறி எப்போதும் இருந்ததில்லை சோமன்தெருவில் தொல்லை
எல்லை மீறி எப்போதும் இருந்ததில்லை சோமன்தெருவில் தொல்லை                                உலக நாடுகள் சோமன்தெருபோல் சேர்ந்து  பிரித்தாலும் பிரியாது வாழ்ந்தால்       உலகத்தில் இருக்காது போர் தொல்லை!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments:

  1. நமது கிராமத்தின் மையப்பகுதி சோமன் தெரு கவிதை விளக்கம் 👌

    ReplyDelete