Monday, 10 February 2025

கள்ளழகர் கோவில்! ஊரோ அழகர் கோவில்?

 

கல்லே அழகாகி கல்லழகர் அங்கில்லை கல்லின் அழகோடு கள்ளழகர்தான் அங்குண்டு
கள்ளழகர் கோவிலென ஊரின் பெயர் அங்கில்லை
அழகர் கோவிலென ஊரின் பெயர்தான் அங்குண்டு
அழகர் கோவில்தனில் பேரழகோடு அழகர் அங்கில்லை
அழகர் கோவில்தனில் பேரழகோடு கள்ளழகர்தான் அங்குண்டு
ஆணான கள்ளழகர் அடிவார ஆண்டவனாக அங்குண்டு
பெண்ணான ஆண்டாளும் அருள்தர ஆண்டவனோடு அங்குண்டு

மீனாட்சி அம்மன் கோயிலால் பழம் பெருமை பெற்றதும் அங்கே
கோயிலில் சங்ககால புலவர்களின் சிலையால் பலம் பெறுவதும் அங்கே
காசுப் புழங்குவது என்றென்றும் நிறையவே இருப்பது அங்கே
தூசுப் பறப்பது இன்றும் நிறையவே இருக்கிறது அங்கே
தமிழ் என ஒரு கடைத் தொகுதிக்குப் பாதிப் பெயர் இருப்பது அங்கே
தமிழ் ஷாப்பிங் மால்ஸ் என மீதிப் பகுதி பெயர் இருப்பதும் அங்கே!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments:

  1. மதுரை திருமலைநாயக்கர் மகால் வைகைநதி போன்றவற்றையும் இணைக்கலாமே! வாழ்த்துகள்!
    அன்புடன், குவளை மணியன் கோவை.

    ReplyDelete