மலை மீது அமர்ந்து மண் மீது நடக்கும் கூத்தைப் பார்த்துச் சிரிக்கிறாயா முருகா?
மதம் மீது ஏறி தடம் மாறித் தள்ளாடும் பித்தைப் பார்த்துச் சிரிக்கிறாயா முருகா?
எம்மதமும் சம்மதம் எனக் கூவுவோரைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கிறாயா முருகா?
என்மதமே எம்மதமும் எனக் கத்துவோரைப் பார்த்து கேவலமாய்ச் சிரிக்கிறாயா முருகா?
அரசியலெனும் மதம் பிடித்துப் போடும் ஆட்டத்தைப் பார்த்துச் சிரிக்கிறாயா முருகா?
ஆன்மீகமெனும் மதம் பிடித்துக் கூடும் கூட்டத்தைப் பார்த்துச் சிரிக்கிறாயா முருகா?
மக்களைப் பிடித்த மத போதையைத் தெளியச் செய்து சிரித்தே அருள் புரிந்திடு முருகா!
- தஞ்சை த.இராமநாதன்

மதங்களைக் கடந்தவன் எல்லோர்க்குமான இறைவன்.
ReplyDelete👍👍
Deleteமத(உரை)அரசியல்
ReplyDelete👍
Delete