Saturday, 4 January 2025

சொல்லும் பொருளும்

 

சொல்லும் பொருளும்

ஏற்று என்பாரே ஏத்து என்பார்
வேற்று என்போரோ வேத்து என்பாரா?

காற்று என்பாரே காத்து என்பார்
பற்று என்போரோ பத்து என்பாரா?

மாற்று என்பாரே மாத்து என்பார்
போற்று என்போரோ போத்து என்பாரா?

தூற்று என்பாரே தூத்து என்பார்
கூற்று என்போரோ கூத்து என்பாரா?

தொற்று என்பாரே தொத்து என்பார்
ஆற்று என்போரோ ஆத்து என்பாரா?

சுற்று என்பாரே சுத்து என்பார்
கற்று என்போரோ கத்து என்பாரா?

- தஞ்சை த.இராமநாதன்

4 comments:

  1. மிகவும் சிறப்பான வார்த்தைகள் தவறாக கூறினயால் அருமை....

    ReplyDelete
  2. ரவி சங்கர்5 January 2025 at 05:39

    நச்சுனு குத்தமில்லாத நாலு கூத்து (நற்செய்தியாய் குற்றாமில்லா நல்ல கூற்று)

    ReplyDelete