எவ்வேளையும் நல்வேளையே!
எவ்வேளையில் எவ்வேலையைச் செய்ய வேண்டுமோ அவ்வேலையை அவ்வேளையில் செய்யத் தவறியதால்
இவ்வேளையில் இவ்வேலையைச் செய்ய வேண்டிய நிலை வந்ததோ?
எவ்வேலையை எவ்வேளையில் செய்ய முயன்றாலும் அவ்வேலையை எவ்வேளையிலும் செய்ய இயலாததால் இவ்வேளையில் எவ்வேலையையும் செய்ய முயலாத நிலை வந்ததோ?
இவ்வேளையில் அவ்வேலையோ அவ்வேளையில் இவ்வேலையோ
எவ்வேளையிலும் எவ்வேலையையும் செய்து முடிக்க இவ்வேளையில் சபதம்
எடுக்க எவ்வேளையும் நல்வேளையே!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment