இல்லாள்
கள்ளம் கபடமில்லா இல்லாள்
பொன்னும் பொருளுமில்லா இல்லாள்
தன்னலம் தன்னிகரில்லா இல்லாள்
ஆடம்பரம் ஆர்ப்பரிப்பில்லா இல்லாள்
கடமையோடு கண்ணியமிகு இல்லாள்
பண்போடு பாசமிகு இல்லாள்
உண்மையோடு ஊக்கமிகு இல்லாள்
எளிமையோடு ஏற்றமிகு இல்லாள்
சுடும் சொல்லைச் சொல்லாள் இல்லாள் கடும் செயலைச் செய்யாள் இல்லாள்
நலம் நாட்டிட நல்லாள் இல்லாள்
குலம் காத்திட உள்ளாள் இல்லாள்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment