வறுத்துக் கடித்தல்
கிறுக்கி கிறுக்கிக் கொண்டே இருந்து கிறுக்கியோள் கிறுக்கியாகி இருந்தால்
கிறுக்கிக் கிறுக்கிக் கொண்டே இருந்து
கிறுக்கியோன் கிறுக்கனாகி இருப்பான்
பொறுக்கிப் பொறுக்கிப் பார்த்தாலும்
பொறுக்கியரே பொறுக்கியர் கூட்டத்தில் காத்திருப்பர்
நறுக்கி நறுக்கியதைப் பார்த்தாலும் நறுக்காததையும் நறுக்கவே திட்டத்தில் வைத்திருப்பர்
வறுத்து வறுத்து வறுத்ததை அடுத்து வாயில் எடுத்துப் பல்லால் கடிப்பர்
வெறுத்து வெறுத்து வெறுத்ததை அடுத்து கையில் எடுத்துச் சொல்லால் அடிப்பர்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment