காந்தி ஜெயந்தி (காந்தியின் குரல்)
வாங்கி வைத்துக் குடித்திடக் கூடிடும் முதல் நாளிலேயே ஒரு கூட்டம்
வாங்கி வைத்தது முடிந்ததும் வாங்கிடக் கூடிடும் அடுத்த நாளில் ஒரு கூட்டம்
குடிக்கக் கூடாதெனக் கூட்டாகக் கூடிப் பேசக் கூடிடும் இந்நாளில் ஒரு கூட்டம்
கூடிப் பேசியபின் கூட்டாகக் குடிக்கக் கூட்டத்திலேயே திட்டமிடும் ஒரு கூட்டம்
குடிக்கக் கூடாதென உரக்கப் பேச குடிக்கக் கொடுத்துக் கூட்டிவரும் ஒரு கூட்டம்
குடித்தால் குடி கெட்டுவிடுமெனப் பேசியே
குடியைக் கெடுத்துவிடும் ஒரு கூட்டம்
எல்லா நாளிலும் புலாலோடு குடித்துக் கூத்தாடுது இந்த உருப்படாத கூட்டம்
எனதுப் பிறந்தநாளிலும் குடித்துக் கூத்தாடினால் உருப்படுமா இந்த கூட்டம்?
- தஞ்சை த.இராமநாதன்

👍👌🤝
ReplyDelete🙏🙏
Deleteமாநில வருமானம் பாதிக்குமாம்.
ReplyDeleteவருமானம் அவமானம் ஆகிவிடக் கூடாது.
ReplyDelete