பழநி பஞ்சாமிர்தம்
பேரீச்சையைத் துண்டாகத் துண்டித்து
ஏலக்காயைப் பொடியாகப் பொடித்து
வாழைப் பழத்தை உரித்து மசித்து
திராட்சையைக் கச்சிதமாய் சேர்த்து
தேனை அளவோடு அள்ளித் தெளித்து
சர்க்கரையோடு கற்கண்டைக் கலந்து
பசைபோல் உள்ளங் கையில் வைத்து நாவில் தவழ்ந்து அமிர்தமாய் இனித்ததும்
காதில் பழநி பஞ்சாமிர்தமென கேட்குதே!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment