Tuesday, 24 September 2024

திருப்பதி லட்டு

 

லட்டு

தலையில் முடியை ஒட்ட மொட்டைப் போட்டு
வாயில் கிட்டப் பிடி லட்டைப் பிட்டுப் போட்டு
என்ன சுவை இதுவென வியந்ததுப் போய்
என்ன சுவை இதுவென பயந்தோமே ஓய்!

லட்டின் சொந்த கதையும் நமக்குத் தெரியாது
லட்டு இங்கு வந்த கதையும் நமக்குப் புரியாது
திருப்பதியின் சுவை லட்டை இனி கோளினி என்போம்
திருப்தியான கோளினியை இனி சுவைத்துத் தின்போம்!

- தஞ்சை த.இராமநாதன்

No comments:

Post a Comment