கூவில் அலைந்து காவில் மேய்ந்து வையை உண்டால் ஆவில் பால் சுரக்கும்
ஆவைப் பார்த்து பாவைக் கோர்த்து நாவால் இசைத்தால் பாலை ஈக்கும்
ஆவை நேயன்றி ஏ கொண்டு கொன்று ஆவின் ஊவை தீ கொண்டு கறி கண்டு நேயற்று நா சொட்ட சுவைத்துண்போன்
நீயெனினும் நையுற்ற கையற்றோன்
பையில் பையைத் தையல் தைத்தாலும்
நோவின் மூவில் கையால் தைத்தாலும்
தையலோ தையலெனத் தைத்த தையல் யாவும் நீளாத சேவான தூ தையல்
சோம்பேறி சோவேறி வீ கொடுத்தாலும்
நேயேறி மேயேறி காதல் பேயாகும்
தா தந்தபின் போவெனெ சொன்னாலும்
ஏவெய்த மோகம் மீவழி பொழிவாகும்
கை இழந்தால் கூவின் ஐயான கோனும்
நையாகி சீயாகி நோவடைவான்
தூவோடு வாழும் கோலின் வறியோனும்
தேயின் அருளோடு சேவடைவான்!
- தஞ்சை த.இராமநாதன்

கூவில் பாவின் ஐயன். வாழ்த்துக்கள்
ReplyDelete🤝🤝
Delete