மிதி வண்டி புகட்டும் பாடம்
மிதித்தால்தான் ஓட்ட முடியும் என்பதால் திமிரோடு மிதிப்பதும் உண்டு
மிதி பட்டால்தான் ஓட முடியும் என்பதால் சாலைதோறும் மிதி படுவதும் உண்டு
மிதித்தவன் மிதித்துக் கொண்டே இருக்கப் போவதும் இல்லை
மிதி பட்டவன் மிதி பட்டுக்கொண்டே இறக்கப் போவதும் இல்லை
மிதிக்க மிதிக்க ஓடும் ஓட்டம் கூடி வேகமும் அதிகரிக்கின்றது
ஓட ஓட மிதிப்பவர் மிதி வேகமும் கூடி ஓட்டமும் அதிகரிக்கின்றது
மிதித்தாலும் மிதிப்போரை மிதிக்குமாறு மதிக்கும் மிதிவண்டியை மதிப்போம்!
- தஞ்சை த இராமநாதன்

மிதி மிதியென்று மிதித்துள்ளீர்கள். வாழ்த்துகள்! குவளை மணியன்.
ReplyDelete🙏🙏
ReplyDeleteமிதிப்பையும் மதிப்போம். நல்ல கருத்து
ReplyDelete🙏🙏
ReplyDelete