Monday, 3 June 2024

மிதி வண்டி புகட்டும் பாடம்



மிதி வண்டி புகட்டும் பாடம்

மிதித்தால்தான் ஓட்ட முடியும் என்பதால் திமிரோடு மிதிப்பதும் உண்டு
மிதி பட்டால்தான் ஓட முடியும் என்பதால் சாலைதோறும் மிதி படுவதும் உண்டு

மிதித்தவன் மிதித்துக் கொண்டே இருக்கப் போவதும் இல்லை
மிதி பட்டவன் மிதி பட்டுக்கொண்டே இறக்கப் போவதும் இல்லை

மிதிக்க மிதிக்க ஓடும் ஓட்டம் கூடி            வேகமும் அதிகரிக்கின்றது
ஓட ஓட மிதிப்பவர் மிதி வேகமும் கூடி ஓட்டமும் அதிகரிக்கின்றது

மிதித்தாலும் மிதிப்போரை மிதிக்குமாறு மதிக்கும் மிதிவண்டியை மதிப்போம்!

- தஞ்சை த இராமநாதன்

4 comments:

  1. மிதி மிதியென்று மிதித்துள்ளீர்கள். வாழ்த்துகள்! குவளை மணியன்.

    ReplyDelete
  2. ரவி சங்கர்12 June 2024 at 17:57

    மிதிப்பையும் மதிப்போம். நல்ல கருத்து

    ReplyDelete