வதங்கினால் வாடி விடுவேன்
கூறு கெட்ட மக்களிடம் நான் கூறு கட்டி காய்களை விற்க வந்தேன்
மாடி வீட்டு மக்களிடம் கூரை வீட்டுக் காய்களை விற்க வந்தேன்
விற்று விட்டால் வியர்த்துக் கொட்டும் வியர்வையை வெறுக்க மாட்டேன்
விற்காவிடில் பொறுக்காது கொல்லும்
பசியையோ பொறுக்க மாட்டேன்
தள்ளாத வயதில் காலம் தள்ளும் வழி
நாடி பிழைக்க வந்தேன்
பொல்லாத உலகில் நானும் வாழ வழி தேடி உழைக்க வந்தேன்
காலை மாலையென நின்றேன்
களைத்து மலைத்து அமர்ந்தேன்
வதங்காமல் வாங்கி விட்டால்
வாடாமல் வாழ்ந்து விடுவேன்!😭
- தஞ்சை த இராமநாதன்

Support them and respect their efforts 🙏
ReplyDelete🤝🤝
Deleteமிகவும் நன்று!
Delete🙏🙏
Delete