Wednesday, 22 May 2024

வந்த பாதையை மறக்கின்றாய்

 

வந்த பாதையை மறக்கின்றாய்

விடாது மழை பெய்தால் ஓடோடித் தேடி
குடையை எடுத்து விடாதுப் பிடித்து பாசப் பிணைப்போடு அணைத்து மழை விட்டதும் மறந்து விடுகின்றாய்

விடாது வெயில் அடித்தால் குடையை விட்டு விடாது கையோடு அணைத்து
விரித்து எடுத்து வெயிலை மறைத்த நிழலையும் மறந்து விடுகின்றாய்

மழை முடிந்ததும் வெள்ளத்தை மறக்கின்றாய்    வெயில் முடிந்ததும் நிழலை மறக்கின்றாய் வேலை முடிந்ததும் குடையை மறக்கின்றாய்      பணம் வந்ததும் வந்த பாதையை மறக்கின்றாய்! 

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment