Sunday, 2 June 2024

வதங்கினால் வாடி விடுவேன்

வதங்கினால் வாடி விடுவேன்

கூறு கெட்ட மக்களிடம் நான் கூறு கட்டி காய்களை விற்க வந்தேன்
மாடி வீட்டு மக்களிடம் கூரை வீட்டுக் காய்களை விற்க வந்தேன்

விற்று விட்டால் வியர்த்துக் கொட்டும் வியர்வையை வெறுக்க மாட்டேன்
விற்காவிடில் பொறுக்காது கொல்லும்
பசியையோ பொறுக்க மாட்டேன்

தள்ளாத வயதில் காலம் தள்ளும் வழி
நாடி பிழைக்க வந்தேன்
பொல்லாத உலகில் நானும் வாழ வழி        தேடி உழைக்க வந்தேன்

காலை மாலையென நின்றேன்
களைத்து மலைத்து அமர்ந்தேன்
வதங்காமல் வாங்கி விட்டால்
வாடாமல் வாழ்ந்து விடுவேன்!😭

- தஞ்சை த இராமநாதன் 

4 comments: