Wednesday, 1 May 2024

யார் தொழிலாளி? யார் முதலாளி?

பணத்தைப் பார்க்க உழைத்து வாழ்கிறார்கள் தொழிலாளிகள்
பணத்தைக் காக்க உழைக்காது வாழ்கிறார்கள் முதலாளிகள்

அரசியலால் அவதிப்பட்டு வாழ்கிறார்கள் தொழிலாளிகள்
அரசியலால் ஆதாயப்பட்டு வாழ்கிறார்கள் முதலாளிகள்

தொடர்ந்திடும் வறுமையோடு வாழ்கிறார்கள் தொழிலாளிகள்
தொடர்ந்திடும் பெருமையோடு வாழ்கிறார்கள் முதலாளிகள்

வருடாவருடம் முதலாளியிடம் ஏமாந்து வாழ்கிறார்களோ தொழிலாளர்கள்?
வருடாவருடம் தொழிலாளரை ஏமாற்றி வாழ்கிறார்களோ முதலாளிகள்?

உழைத்து வாழ்வோம்!

- தஞ்சை த.இராமநாதன்

7 comments: