Friday, 3 May 2024

மொழியா? இசையா?

 

மொழியா? இசையா?

எங்கே எப்போது குயில் கூவினாலும்
கூவிய கூவலே மொழியாகிடுமா?
எங்கே எப்போது நாய் குரைத்தாலும்
குரைத்த குரைப்பே மொழியாகிடுமா?

பொங்கலுக்கு இனிப்பு சிறப்பானாலும்
அரிசி இல்லாது பொங்கல் வந்திடுமா?
மதுவை அருந்தி உயிர் வாழ்ந்தாலும்
நீர் அருந்தாத உயிர் வாழ்ந்திடுமா?

ஊறுகாயை உணவோடு உண்டாலும்
ஊறுகாயையே உணவாக உண்போமா?
தலைமுடிகள் தலைக்கு அழகானாலும்
மொட்டையானால் தலையை வெட்டுவோமா?

தப்பைத் தப்புத் தப்பாகத் தட்டி ஆடினாலும் தப்பைக் கலையத் தப்பால் முடியுமா?
விழாவைத் துவக்கத் தட்டிக் கொட்டினாலும்
மொழியால் இயம்பாது முடிப்போமா?

கங்கையில் அமர்ந்து முனகினாலும் வைகையில் திரிந்து முழங்கினாலும்
காவிரிநாடாம் இராஜராஜனின் மண்ணிலே    தமிழனின் மொழி தலைநிமிர்ந்து ஒலிக்கும்!


- தஞ்சை த இராமநாதன்

6 comments: