தூங்கும் வரம் வேண்டும்
உழைப்பின் களைப்போடு தூங்க முயன்றாலும் தூங்க முடியாததால் கடினமாக உழைப்பவருக்கும் ஏக்கம்
உள்ளத்தின் களைப்போடு தூங்க முயன்றாலும் தூங்க முடியாததால் கடினமாக உழைக்காதவருக்கும் ஏக்கம்
தூங்க நேரமில்லேயேயென நேரத்தைப் பார்த்துக் கொண்டே நேரத்தை ஓட்ட நினைப்பவர்களுக்கும் ஏக்கம்
நேரமிருந்தும் தூக்கமில்லையேயெனத் தூக்கத்தை நினைத்துக் கொண்டே நேரத்தை ஓட்டுபவர்களுக்கும் ஏக்கம்
தொட்டிலில் ஆடியபடி அம்மாவின் தாலாட்டைக் கேட்டபடி ஆனந்தமாகத் தூங்கியதை நினைத்தாலும் ஏக்கம்
கட்டிலில் படுத்தபடி ஆன்மாவின் தவிர்ப்பைக் கேட்டபடி அலங்கோலமாகத்
தூங்காததை நினைத்தாலும் ஏக்கம்
உழைக்க முடியாமல் உடுத்த முடியாமல் உண்ண முடியாமல் தளர்ந்துத் தூங்கினால் உயிரோடு முடிந்திடும் ஏக்கம்
மீண்டும் பிறந்து அம்மாவின் மடியில் அயர்ந்து தூங்குவதாகக் கனவு வந்தால் கண்ணீரோடு முடிந்திடும் தூக்கம்!
- தஞ்சை த இராமநாதன்

அருமை 💐
ReplyDelete🙏🙏
DeleteVazhugal
ReplyDelete🙏🙏
Delete