தரத்தோடு தகுதி
தகுதி இல்லாதவனுக்குத் தகுதியைத் தந்தால் தகுதியே தன் தரத்தைத் தானாகவே இழந்துவிடும்
தரம் இல்லாதவனுக்குத் தகுதியைத் தந்தாலும் தரமும் தானாகவே தன் தகுதியை இழந்துவிடும்
முயலைப் பிடிக்கும் நாயின் தகுதி முகத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும்
கயவர்களின் கள்வத்தின் மிகுதி கண்களைப் பார்த்தாலே தெரிந்துவிடும்
நயவஞ்சகர்களின் குள்ளநரித் தனம் நேரம் வரும்போது தானாகவே வெளிப்பட்டுவிடும்
வேடதாரிகளின் மாறுவேடத் தனம் வேடம் கலையும்போது தானாகவே வெளிப்பட்டுவிடும்!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment