Saturday, 11 May 2024

ஏமாற்றியவன் ஏமாந்து ஏமாறுவான்

 

ஏமாற்றியவன் ஏமாந்து ஏமாறுவான் 

ஏமாற்றியவன்தான் ஏமாறினானா?
ஏமாறத்தான் ஏமாற்றினானா?
ஏமாற்றியவனே ஏமாறியவனானா?
ஏமாந்ததால்தான் ஏமாற்றியவனானா?

ஏமாறவேதான் ஏமாற்றுகிறானா?
ஏமாற்றத்தால்தான் ஏமாற்றுகிறானா?
ஏமாறியவனையே ஏமாற்றுகிறானா?
ஏமாறியவனிடமே ஏமாற்றுகிறானா?

ஏமாந்தவன்தான் ஏமாறுகிறவனா?
ஏமாந்தவனேதான் ஏமாறியவனா?
ஏமாந்தவனால்தான் ஏமாறுகிறானா?
ஏமாறுகிறவன்தான் ஏமாறுவானா?

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment