நிலை மாறாதத் தக்காளி
முப்பத்து மூன்றுத் தினங்களாகவே தக்காளி நிறத்தில் மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை
முப்பத்து மூன்றிலும் மஞ்சளாகவே தக்காளித் தரத்தில் மாற்றம் இருப்பதாகவும் தெரியவில்லை
அந்த நிலத்தில் விளைந்ததா அல்லது இந்த நிலத்தில் விளைந்ததா எனத் தெரியாது
கந்தக நிலத்தின் விளைச்சலா அல்லது குந்தக நிலத்தின் விளைச்சலா எனவும் தெரியாது
உரமிட்டு வளர்த்து உணர்வற்று வளர்ந்து உயிர் போய் இருப்பதுபோலும் தெரிகின்றது
தரமற்று வளர்ந்து உயிரற்றுத் தளர்ந்து உணர்வுப் போய் இருப்பதைப்போலும் தெரிகின்றது
அழுகிடாமல் இருக்க அமுங்கிடாமல் இருப்பதைப் பார்த்து அமுக்கி வாங்கி வியந்தவர்கள் நாங்கள்
அமுங்கிடாமல் இருந்து அழுகிடாமல் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து வியந்து பார்ப்பீர்கள் நீங்கள்!
- தஞ்சை த இராமநாதன்

அருமை யானா பகிர்வு
ReplyDelete🙏🙏
Delete