Friday, 19 April 2024

பற்றற்ற பற்றைப் பற்றுவோம்


பற்றற்ற பற்றைப் பற்றுவோம்

பற்றோடு பற்றின்றிப் போனால்... போனால்...
பற்றின்றி பற்றோடுப் போவோம்...
போவோம்
பற்றின்றிப் பற்றோடுப் போனால்... போனால்...
பற்றற்ற பற்றினோடுப் போவோம்...
போவோம்

கெத்தோடு கெத்தற்றுப் போனால்...
போனால்...
கெத்தற்ற கெத்தோடுப் போவோம்...
போவோம்
கெத்தற்ற கெத்தோடுப் போனால்...
போனால்...
திக்கெட்டும் திக்கற்றுப் போவோம்...
போவோம்

உயிரற்ற உணர்வோடுப் போனால்...
போனால்...
உணர்வற்ற உயிரோடுப் போவோம்...
போவோம்
உயிரற்ற உறவோடுப் போனால்...
போனால்...
உண்மையற்று உறவாடிப் போவோம்...
போவோம்

மானமற்று பணத்தோடுப் போனால்...
போனால்
பணத்தோடு மானமற்றுப் போவோம்...
போவோம்
குணமற்ற இனத்தோடுப் போனால்...
போனால்
குற்றமுற்ற மனத்தோடுப் போவோம்...
போவோம்!

- தஞ்சை த இராமநாதன்

6 comments: