காற்றும் கடிகாரமும்
பிடிபடாத காற்றைப் பிடித்து அடித்தால் பந்துக்குள்ளே ஒதுங்கிக் கிடக்குது
பந்துக்குள்ளே பதுங்கிய காற்றை உதைத்து அடித்தால் ஓங்கிப் பறக்குது
சுற்றும் காற்றாடி காற்றைச் சுழலும்படி
சுற்றிச் சுற்றி சுழற்றி அடிக்குது
சுழலும் காற்று எகிறிச் சுற்றி அடித்தால்
சுற்றிய காற்றாடி ஒடிந்தோடிப் பறக்குது
சிறிய கடிகாரத்தை மணிக்கட்டில் கட்டினால்
மணியைக் கேட்கச் சொல்லுது
பெரிய கடிகாரத்தை மணிக்கட்டில் கட்டினால்
Moneyயைக் கேட்கச் சொல்லுது
காற்றைப்போல சுற்றும் மனம் பணத்தை நோக்கியே ஓடோடிச் சுற்றுது
கடிகாரத்தைப்போல எண்ணமும் பணத்தை நோக்கியே தேடோடிச் சுற்றுது!
- தஞ்சை த இராமநாதன

No comments:
Post a Comment