Sunday, 7 April 2024

அரிதாகி வருது

 

அரிதாகி வருது

வயதைக் கடந்து கொண்டிருக்கும் வயதில் வாழ்வதை அறிவது அரிது
வயதைக் கடத்திக் கொண்டிருக்கும் வயதில் வாழ்ந்ததை அறிவது அரிது

பணத்தை உழைத்துச் சேர்த்துக் கட்டிக் காத்து வைத்திருப்பது சிறிது
பணத்தை ஏய்த்துச் சுருட்டிச் சேர்த்து ஒளித்து வைத்திருப்பது பெரிது

சேறடித்துப் போரடிக்க வரப்பு வெட்டி
களை பறிக்கும் கழனி மருது                                விளைந்து முதிர்ந்த பயிரை அறுத்து எடுத்து கலத்தில் அடிப்பதுக் கருது

ஏமாற்றிப் பித்தலாட்டம் செய்வோரைக் கண்டால் தூற்றும் எண்ணம் வருது
ஏமாந்துப் பித்தாட்டம் அலைவோரைக் கண்டால் தேற்றும் எண்ணம் வருது!

- தஞ்சை த இராமநாதன்

10 comments: