மரபணுவோடு கலந்ததா திருட்டு?
உப்பைத் தின்றவர் தண்ணீர் உட்கொள்வதைத் தடுக்க முடியுமா?
உதிபோல் பெருத்து வளர்ந்தாலும் உத்திரத்திற்குப் பயனாக முடியுமா?
ஏமாற்றுபவர் ஏமாற்றி ஏய்க்கும்வரை
ஏமாறப் போகிறவரை மறக்க முடியுமா?
ஏமாறுபவர் ஏமாறி ஏமாந்தபின்
ஏமாற்றியவரை மறக்க முடியுமா?
திருடும் உள்ளம் படைத்தவரால் திருடாமல் இருக்க முடியுமா?
திருட்டு மரபணுக் குடும்பத்தில்
திருடாதோர் இருக்க முடியுமா?
எச்சில் இலை கோபுரம் அடைந்தாலும்
எதிர்காலம் தரைதான் மாற்ற முடியுமா?
எந்தநாய் ஏரியில் குடிக்கச் சென்றாலும்
ஏரியின் நீரை நக்காமல் குடிக்க முடியுமா?
- தஞ்சை த இராமநாதன்

Yes
ReplyDelete🤝🤝
ReplyDelete