Monday, 1 May 2023

'அவர்கள்' என்பது ஒருமையா?

 


'அவர்கள்' என்பது ஒருமையா?

ஒருவர் பெயரை எழுதியபின் "அவர்கள்" என எழுதுவது சரியாகத் தெரியவில்லை
ஒருவர் பெயரைச் சொல்லி அவர்களே எனச் சொல்வதும் சரியாகத் தெரியவில்லை

மரியாதைக்குரிய தலைவரே எனப் பேசுவது தவறாகத் தெரியவில்லை
மரியாதைக்குரிய தலைவர் அவர்களே என்பது சரியாகத் தெரியவில்லை

அவர் பேச இருக்கின்றார் எனச் சொல்வது தவறாகத் தெரியவில்லை
அவர் பேச இருக்கின்றார்கள் எனச் சொல்வது சரியாகத் தெரியவில்லை

He/She என இருபாலரை வேறுபடுத்திச் சொல்வது தவறாகத் தெரியவில்லை 
ஆண்/பெண் இருபாலரையும் அவரெனச் சொல்வது சரியாகத் தெரியவில்லை

Honourable Prime Minister என்பது தவறாகத் தெரியவில்லை
மாண்புமிகு பிரதமர் அவர்கள் என்பது சரியாகத் தெரியவில்லை

அவரை அவரென எவர் சொன்னாலும்  அது தவறாகத் தெரியவில்லை
அதை அவர்களென எவர் சொன்னாலும் அது சரியாகத் தெரியவில்லை!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments: