Sunday, 19 February 2023

நான் பார்த்த பாரதி பார்த்த சாரதி

 

நான் பார்த்த பாரதி பார்த்த சாரதி
           (மறைந்த நாள்: 6 July 2021)

ஒல்லியான உடலுடையார்
உறுதியான உளமுடையார்
சிரித்த முகமுடையார்
சிறந்த மனமுடையார்
வேகமான நடையுடையார்
விவேகமான உளமுடையார்
ஆன்மீக ஞானமுடையார்
பகுத்தறியும் பண்புடையார்

உலகச் செய்திகளை எல்லாம் அன்றாடம் அறிந்திருந்தார்
விளையாட்டுப் போட்டிகளின் போக்கையும் புரிந்திருந்தார்
போலி வாழ்க்கை வாழ்வோரை நன்கு உணர்ந்திருந்தார்
நல்லவர் என்ற பெயரோடு வாம்போவில் வாழ்ந்திருந்தார்

திருடும் திருடர்கள் திருந்த வேண்டும் என்பார்
அக்கிரம முரடர்கள் வருந்த வேண்டும் என்பார்
நல்லவரைத் தாராளமாய்த் தட்டிக் கொடு என்பார்
தீயவரைத் தயங்காமல் தட்டிக் கேள் என்பார்!

- தஞ்சை த இராமநாதன்                                         பதிந்த நாள்: 7 July 2021 

2 comments: