தாடி
வாழ்ந்து தொடர்கின்ற சோகங்களைச் சொல்லவே வளர்க்கின்றார் பலபேர் தாடி வாழ்ந்து தொடர்கின்ற சுகங்களைச் சொல்லவும் வளர்க்கின்றார் சிலபேர் தாடி
சிறிதாக முளைத்தால் முளையிலேயே மழிக்கப்படுகிறது பலபேரின் தாடி
பெரிதாக தழைத்தால் முகத்திலேயே மதிக்கப்படுகிறது சிலபேரின் தாடி
தடவப் பார்த்தாலும் தடவும் அளவிற்கு வளர்வதில்லை பலபேருக்கு தாடி
தடவத் தடவ மீண்டும் தடவச் சொல்லும் அளவிற்கு வளர்கின்றது சிலபேருக்கு தாடி
முனிவரானவருக்கு அக மாற்றத்தைக் காட்டுகின்றது பலபேரின் தாடி
ஞானியானவருக்கு முக மாற்றத்தைக் காட்டுகின்றது சிலபேரின் தாடி
இத்தாடி குறுந்தாடியோ நெடுந்தாடியோ இளந்தாடிகள் யாவும் கருந்தாடிகளே
அத்தாடி உந்தாடியோ எந்தாடியோ முதுந்தாடிகள் யாவும் வெண்தாடிகளே!
- தஞ்சை த இராமநாதன்

👌
ReplyDelete👌
ReplyDelete