Sunday, 13 November 2022

வயதுக்கேற்ற அழகு


வயதுக்கேற்ற அழகு

துள்ள முடிந்த வயதில் துள்ளியமை அழகு
துள்ளல் முடிந்த வயதில் துள்ளாமை அழகு
துள்ள முடிந்தபோது துள்ளி முடித்தமை அழகு
துள்ள முடியாதபோது தள்ளி வைத்தமை அழகு

சிரித்தாலே குழி விழுந்த இள முகமும் அழகு
சிரிக்காமலே குழி விழுந்த கிழ முகமும் அழகு
வாழ்ந்ததைப் பற்றி கவலைப்படாததும் அழகு
வாழ்வதைப் பற்றி கவலைப்படுவதும் அழகு

கற்க வேண்டியதை கற்காதக் காலமும் அழகு
கற்காதப் பாடத்தை கற்பிக்கும் காலமும் அழகு
ஓடி அடங்கி களைத்துப் போனதும் அழகு
நாடி அடங்கி இளைத்துப் போனதும் அழகு!

- தஞ்சை த.இராமநாதன்




2 comments:

  1. கற்க வேண்டியதைக் கற்காத காலமும் அழகு
    கற்காத பாடத்தைக் கற்பிக்கும் காலமும் அழகு

    ReplyDelete