தமிழும் தமிழரும்
தமிழைத் தாயென அழைத்ததுண்டு
தாயைத் தமிழென அழைப்பதுமுண்டு
தமிழை அமிழ்தென நினைத்ததுண்டு
அமிழ்தே தமிழென நினைப்பதுமுண்டு
தமிழைத் தமிழர் வாழ்த்தியதுண்டு
தமிழரே தமிழை வீழ்த்துவதுமுண்டு
தமிழை உச்சரிப்போடு பேசியோருண்டு
தமிழை நச்சரிப்போடு பேசுவோருமுண்டு
தமிழால் பிழைப்பை ஓட்டியோருண்டு
தமிழன் பிழைப்பை ஓட்டுவோருமுண்டு
தமிழைக் களங்கப்படுத்தாது காத்தோருண்டு
தமிழைக் களங்கப்படுத்தவே காத்திருப்போருமுண்டு!
- தஞ்சை த.இராமநாதன்

சிறப்பு,வாழ்த்துகள்!
ReplyDelete🙏🙏
Deleteஅருமை
ReplyDelete🙏🙏
ReplyDelete