Tuesday, 30 August 2022

என் பெரியம்மா

 

என் பெரியம்மா (இறப்பு: 29-08-2022)

அம்மா வீட்டில் பிறந்த பெரியம்மா
பாட்டன் வீட்டில் வாழ்ந்த பெரியம்மா
அம்மணியின் மூத்த மகள் பெரியம்மா
அய்யாவின் செல்ல மகள் பெரியம்மா
இரு தம்பிகளுக்குத் தெம்பு பெரியம்மா
இரு தங்கைகளுக்குப் பலம் பெரியம்மா
அக்காயியின் அம்மா என் பெரியம்மா
அண்ணய்யாவின் அம்மா என் பெரியம்மா
மாரியம்மாவின் அம்மா என் பெரியம்மா
பேரப் பிள்ளைகளுக்குப் பிடித்தவர் என் பெரியம்மா!

நகைச் சுவை பல அறிந்த பெரியம்மா
நகைகள் பல அணிந்த பெரியம்மா
இங்கிருந்து உறவுகளை இணைத்து வைத்து ஆசீர்வதித்தப் பெரியம்மா                    எங்கிருந்தாலும் எங்களை இணைத்து வைத்தே ஆசீர்வதியுங்கள் பெரியம்மா!

- தஞ்சை த இராமநாதன்


6 comments: