எப்போதும் அப்பா அப்பாதான்
அப்போது அப்பா இருந்தார்
இப்போதோ அப்பா இறந்தார் அப்போது என்னுருவில் இருந்தார் இப்போதோ என்னுயிரில் மறைந்தார்
அப்போது தன்மானத்துடன் வாழ்ந்தார் இப்போதோ என்மானத்துடன் கலந்தார்
அப்போது நான் அழ நினைத்தாலும் தேற்றிட அழாததுபோல் நடித்தார்
இப்போது நான் கதறி அழுதாலும் தேற்றிட முடியாது அழுதே நொடித்தார் அப்போதும் இப்போதும் எப்போதும் அப்பா அப்பாதான்!
- தஞ்சை த இராமநாதன்

Correct sir
ReplyDelete🤝
ReplyDelete