காதுக்குக் கேட்காத உணர்வொலி
நீ வேண்டாமென அழுதபோது - நான்
வேண்டுமென அனுப்பி வைத்தேன்
நான் வேண்டாமென அழும்போது
நீயும் வேண்டாமென நினைத்தாயோ?
நீ அடம் பிடித்து அழுதபோது - உனக்கு ஆறுதலாய் இருந்தாங்க உங்கம்மா
நான் அடம் பிடிக்காது அழும்போது எனக்கு ஆறுதலாய் இருப்பார் யாரப்பா?
வீட்டில் இறந்து எனது உயிரைவிட கொடுப்பினை இல்லாது போனதப்பா
அம்மா சென்றயிடம் சென்று சேர்ந்ததும் அப்பா அழாது ஆசீர்வதிப்பேனப்பா!
தஞ்சை த இராமநாதன்

Touching sir...
ReplyDelete🤝🙏🤝
ReplyDelete