Wednesday, 20 April 2022

நிலவில் காதல்

 

நிலவில் காதல்

நிலவை சுற்றிச் சுற்றி வந்திடும் முகிலே சுற்றியும் காதல் கை கூடலியா?
நிலவை தழுவித் தழுவி ஓடிடும் முகிலே
தழுவியும் காதல் கை கூடலியா?

மரமே...
நிலா விழுமென எண்ணி கிளையால் தாங்கிப் பிடிக்க நிற்கிறாயா?
அல்லது..
கிளையின் துணை கொண்டு நிலவை விழாதுப் பிடிக்க தூங்காது நிற்கிறாயா?

- தஞ்சை த இராமநாதன்


1 comment: