உணர்வோடு கலந்த என் அப்பாயி
உயரமானப் பெண்மணி என் அப்பாயி
உயர்வானப் பெண்மணி என் அப்பாயி
உழைத்தப் பெண்மணி என் அப்பாயி உயர்ந்தப் பண்பினள் என் அப்பாயி
அதிக விசயம் அறியாதவர் என் அப்பாயி
அவசிய விசயம் அறிந்தவர் என் அப்பாயி
வீண் பேச்சைப் பேச விரும்பாதவர் என் அப்பாயி
விவசாயமே மூச்செனக் கொண்ட என் அப்பாயி
ராமராசென என்னை அழைத்த என் அப்பாயி
ராசிக்காரனென என்னை அழைத்த என் அப்பாயி
அணைத்துத் தூங்க வைத்த என் அப்பாயி
அறிவுரை சொல்லி ஊக்கப்படுத்திய என் அப்பாயி
வெள்ளை முறுக்குக் கொடுத்த அப்பாயி
என் வீர வரை மீசையை ரசித்த அப்பாயி
கண்கட்டியைக் கண்காணித்த அப்பாயி
நாக்கால் கட்டியை நீக்கிய என் அப்பாயி
8ம் நிலை தேர்வுக்கு அனுப்பிய அப்பாயி
எட்டாத நிலைக்கு சென்றாயே அப்பாயி
போய் வாவென சொன்னாயே என் அப்பாயி
போய் விடுவாயென சொல்லலியே என் அப்பாயி!
- தஞ்சை த இராமநாதன்
மிக நன்று!
ReplyDeleteஅருமை
ReplyDeletesuperb sir...
ReplyDelete