மகளிர் தினம்
சொந்த நாட்டுக்குப் பெயர் தாய்நாடு
சொந்த மொழிக்குப் பெயர் தாய்மொழி
பிறக்கும்போதும் முதல் சொல் அம்மா
இறக்கும்போதும் கடைசிச் சொல் அம்மா
மணவாழ்வு சிறக்கக் காரணம் மனைவி
இனவாழ்வு சிறக்கக் காரணம் மனைவி
குடும்பப் பெருமை காப்பது துணைவி
குடும்ப அருமைக் காப்பதும் துணைவி
பெண்களால் போர் மூள்வதும் இல்லை
பெண்களால் பார் வீழ்வதும் இல்லை
நல்லாளாக நிலம் ஆனதும் பெண்ணால்
நன்னாளாக நாள் ஆவதும் பெண்ணால்
வாழ வைத்த சகோதரிகளே வாழ்க! வாழ்க!!
வாழ வைக்கும் மகள்களே வாழ்க! வாழ்க!!
- தஞ்சை த இராமநாதன்

Arumai ...
ReplyDelete🙏
Delete💐❤️💐
ReplyDelete🙏
Deleteஅருமை
ReplyDeleteநல்ல பதிவு 👌🤝
ReplyDelete