படிப்பது செய்தி பிடிப்பது பிரமை
கொலை கொள்ளை மோசடி நோயைப் பற்றியேப் படித்தால் மனம் என்னவாகும்? கலாச்சார சீரழிவு பண்பாடு பேரழிவுப் பற்றியேப் படித்தால் மனம் என்னவாகும்?
கடையடைப்பு கற்பழிப்பு கல்வீச்சுப் பற்றியேப் படித்தால் மனம் என்னவாகும்?விவாவகரத்து போக்குவரத்து தொடர் ரத்துப் பற்றியேப் படித்தால் மனம் என்னவாகும்?
விலைவாசியில் ஏற்றம் தொலைபேசியில் ஆள் மாறாட்டமென செய்தித் தொடர்ந்தால் பிரமைப் பிடிக்காதா? அறிவுப் பசிக்கு ஏமாற்றம் உணவுப் பசிக்குத் தடுமாற்றமென செய்தித் தொடர்ந்தால் பிரமைப் பிடிக்காதா?
- தஞ்சை த இராமநாதன்
நல்லவை பற்றி சிந்தனை அற்றுப்போகிறது! அல்லவை பற்றி அதிக செய்திகள் பரவுவதால்!
ReplyDelete