அம்மானைப் பாருங்கள்
பசிக்காகப் புல்லை மேய வந்த மான் புசித்தபின் ஓய்வெடுக்குது இந்த மான் தெம்போடுப் படுத்திருக்கு கொம்பு மான் கொம்போடும் படுத்திருக்கு ஆண் மான்
கொம்பில்லா அழகுடன் பெண் மான் துள்ளிக் குதித்து ஓடுவதுப் புள்ளி மான் மிருதுவாகத் தோன்றுவது சருகு மான் மானத்தோடு வாழுவது கவரி மான்
மாயத்திற்காக வந்தால் அது மாய மான் இராமாயாணத்திற்காக வந்ததும் மாய மான் கனியைக் கொடுத்து சிறந்தவர் அதியமான் கனிவைக் கொடுத்து சிறப்பவர் அம்மான்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment