கருவறையில் பத்துத் திங்கள் சுமந்து பெற்றெடுத்தது தாயாக இருந்தாலும் மணவறையில் அமர்ந்து வாழ்வில் உயர்ந்து தலை நிமிரும்வரை நம்மீது அக்கறையோடு இருந்து முதிர்ந்து ஓய்ந்தவர் அப்பா
அக்கம் பக்கமென ஆயிரம் பேர் ஆறுதல் பேசி பேச்சுக்காக கட்டிக் கதறி அணைத்தாலும் உம் உதிரம் காய்ந்து சாயுமாறு இருந்தாலும் உழைத்துக் கடமையைச் செய்ததை மறந்து இறந்தாலும் உணர்வோடு கலந்தவர் அப்பா
கண்டித்துக் கறாராக இருந்து தண்டித்து பிள்ளைகள் நலனைப் பேணிக் காத்து பிறவிப் பயனை அடைந்தோமென தூக்கி வளர வைத்த அப்பாதான் அப்போதும் இப்போதும் எப்போதும் சாமி!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment