இயற்கையுடன் வாழ்வதுதான் வாழ்க்கை
வானம் பார்த்தப் பூமி இருப்பதைப் பாரு வானம் பார்க்காதப் பூமி இருந்தால் கூறு குட்டிக் கூரை சின்ன ஓட்டு வீட்டைப் பாரு பாயில் தூங்கும் ஏழையின் அழகைப் பாரு
ஆடு மாடு கோழியென கூடி நிற்பதைப் பாரு கிடைப்பதைப் பகிர்ந்து வாழ்வதைப் பாரு இல்லாததை இருப்பதாகக் காட்டாத ஊரு இருப்பதை பெருமையாகக் காட்டும் ஊரு
நமக்கு நல்ல பிராண வாயுவைத் தரும் ஊரு நம் பிராணனைக் காக்க உதவுவதைப் பாரு நாம் உயிர் வாழ உன்னத உணவு சோறு நமக்கு சோற்றைத் தந்திடும் நல்ல ஊரு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment