மாறுவது எப்போது?
உள்ளதைக் கொண்டு நல்லதைச் செய்து முடிப்பது எப்போது?
உள்ளதை வைத்து வாழ கற்றுக் கொள்ள முயல்வது எப்போது?
பொதுக் கழிவறை அடிப்படைத் தேவை என்பதை உணர்வது எப்போது?
பொது இடத்தில் சிறுநீர் கழிக்காமல் மானத்தைக் காப்பது எப்போது?
குப்பையை பொது இடத்தில் குவிப்பதை அனைவரும் தவிர்ப்பது எப்போது?
பணத்தைக் குவிக்க ஓடோடும் நாம் மனதைக் குவிப்பது எப்போது?
அறிவற்றச் சமுதாயம் அறிவானச் சமுதாயமாக மாறுவது எப்போது?
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment