Wednesday, 15 December 2021

பழத்தின் பலம்

 


பழத்தின் பலம் 

பூத்துக் குலுங்கி காயாய் இருந்து பழுத்தப் பழங்கள் 

சில பச்சையாய் இருந்து பச்சையாய்ப் பழுத்தப் பழங்கள்

சிற்சில பச்சையாய் இருந்து கருப்பாய்ப் பழுத்தப் பழங்கள் 

பற்பல பச்சையாய் இருந்து மஞ்சளாய்ப் பழுத்தப் பழங்கள்

பல நிறமாய் இயற்கையாய்ப் பழுத்தால் அவை பலமிக்கப் பழங்கள்

பளிச்சென செயற்கையாய்ப் பழுத்தால் அவை பயனில்லாப் பழங்கள்! 

- தஞ்சை த இராமநாதன் 


No comments:

Post a Comment